என் முதல் கவிதை
ஆலயத்தினுள், கணீரென்ற குரல் ‘சத்தாய் நிஷ்க்களமாய்’
சுவர்களில் பட்டுத்தெரித்தது....
குரலின் சொந்தக்காரனை தேடியது கண்கள்...
பாடிக்கொண்டே பீடத்தின் முன் நின்றான்
வெள்ளையங்கியினுள் என் தமிழன்...
திருத்திய சிகை, சுருண்ட முடி,
நேர்த்தியான புருவம், அடர்த்தியான மீசை,
காதல் வழியும் கண்கள், செதுக்கிய மூக்கு,
திறந்த செவிகள், உண்மையை உரைக்கும் உதடுகள்.
தமிழ் இத்தனை அழகா! என புரியவைத்த அழகன்.
சிந்தனையில் தெளிவு, வாயின் வார்த்தைகளில் தெரிந்தது.
கருத்து சுதந்திரம் தற்ப்போது புரிந்தது.
தோற்றத்தில் கம்பீரம் எப்போதும் தொடர்ந்தது.
நிற்கும் போதும், நடக்கும் போதும், அமரும் போதும், பேசும் போதும்.
வெள்ளை நிறம் உன்னால் சிறப்பு பெற்றது.
கருத்தும், சிந்தனையும் ஒவ்வொன்றும் அழகு, உன்னைப்போலவே.
பேச்சினால் கூட்டத்தைக்கட்டுப்படுத்துவதை படித்திருக்கிறேன்.
ஆனால், தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
தோற்றத்திலும் பேச்சிலும் வசீகரம்,
இரண்டும் ஒரு சேர அமைவது அரிது.
அரிதிலும் அரிதானவன் நீ.
பாடும்போது பரலோகத்திற்கு ஏணி வைத்து அழைத்து சென்றது உன் குரல்....
மன்றாடும் போது இதயத்தை உருக வைத்தது உன் தொனி....
குருகிய காலத்தில் உன் பாதம் படாத இடமே இல்லை ஆலயத்தினுள்....
உயிரற்ற பொருட்களை உயிர்ப்பெற செய்தாய்.....
சாத்தியமில்லை, வேறு வழியில்லை என்பதை மாற்றிக்காட்டுவேன் என்று
சவால் விடவில்லை, செய்து காட்டினாய்.
இயேசு, பேதுரு, மோசே இவர்களை கதாநாயர்களாக சித்தரித்தாய்.
நீ அனுபவித்த மருரூபமலையை எங்கள் முன் படமாய் விவரித்தாய்.
என்முன் கதாநாயகனாய் உயர்ந்து நின்றாய்.
திருச்சபையின் நோக்கத்தை வாரந்தோரும் விதைத்தாய்.

சபை சமுதாயத்தின் உறுப்பு, சமுதாயக்கடமை, பிறனை நேசி, ஒடுக்கப்பட்டோரை விசாரி, பிறந்த நாட்டை மதி, என ஒவ்வொன்றும் ப்ரமிப்பாய்!!
அன்பிருந்தால், அங்கு அச்சமில்லை என அன்பை வெளிப்படுத்த வித்திட்டாய்.
உன் திறந்த காதுகளினால் வரவேற்பு, விமர்சனம், வம்பு, வீண்பேச்சு
எல்லாவற்றையும் கேட்டாய்.
பேசக்கூடாததை வெளிப்படையாக பேசினாய்....
கருத்து கந்தசாமிகளுக்கு சாட்டையடி கொடுத்தாய்.
உன் தாரத்திற்கு எல்லாமுமானவன்
உன் மகளுக்கு முதல் காதலன்.
சபைக்கு நேர்த்தியான தலைவன்
தன் பாதையை தானே தேர்ந்தெடுத்துக்கொண்டவன்
தான் நினைத்ததை செயல்ப்படுத்துபவன்....
நீ பாடிய பாடல்கள் செவி வழியாக
இதயத்தை ஆக்கிரமித்துக்கொண்டன....
நீ பாமாலை பாடினால் ஆலயத்தினுள்
பெரியோர்களின் விழியோரங்களில் கண்ணீர் துளிகள்.....
மூன்று மணி நேரம் ஆலயம் உன் கட்டுப்பாட்டுக்குள்
மீதம் நூற்றி அறுபத்தைந்து மணி நேரம் நீ போதித்த வசனத்தின் பாடிய பாடல்களின் கட்டுப்பாட்டிற்குள் நான்..
என்ன மாயம் உன் தோற்றத்திலும் உன் குரலிலும்..
உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் வித்தியாசம் கற்பித்தாய்...
தேவையில்லாத ஒரு சொல் உன் வாயினின்று புறப்பட்டதில்லை..
வழிப்பாட்டினால் ஆலயத்தை ஸ்தம்பிக்க வைத்தாய்...
மலைகளையும், கடற்புறத்தையும் கண்முன்னே கொண்டு வந்து திகைக்கவைத்தாய்!!!
அயலானை நேசிக்க, மனதுருக்கமடைய, சொல்வதைக் கேட்டுக்கொள்ள,
அனைவரிடமிருந்து கற்றுக்கொள்ள, புத்தகங்களை வாசிக்க,
சுயமாக முடிவெடுக்க, வாழ்க்கையை ரசிக்க, புதியவரிடம் அன்புடன் பழக,
எளிதில் யாரையும் மன்னிக்க, நீ சொல்லாமல் சொல்லித்தந்தாய்...

மறப்பதற்க்கு நீ கனவல்ல...
என் உயிருள் உறைந்த உணர்வுகள்..
மலர்ந்த உன் நினைவுகள்..
பறித்துப் போட பூக்கள் அல்ல...
நீ நன்றாக இருக்க மானசீகமாய் ப்ரார்த்தித்துக்கொண்டே இருக்கும்..
உன் ஆண்டாள்..
Comments
Post a Comment