கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)
😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞
ஆறு நாட்களுக்கு முன்பே
அனிலின் ஆனந்தம் பறி போயிருந்தது.
தன் நான்கு மாத குழந்தையை நிமோனியாவுக்கு பறி கொடுத்துவிட்டு துக்கிக்கக்கூட வழியில்லாமல், வசதியில்லாமல், வாய்ப்பில்லாமல், வ...வ...😢வருமானமில்லாமல் சாக்கடைக்கழிவுகளை அள்ள கருவிகளோடே அனில் மனிதனால் வந்த கழிவகற்ற புதுதில்லியின் சாக்கடையொன்றில் இறங்கினான்.
அதன் பிறகு போஸ்ட் மார்ட்டம் முடிந்த பாடியாகவே உலகுக்கு அறிவிக்கப்பட்டான்.
செய்தித்தாள்கள் 'உச்' கொட்டின.
சமுகவலைத்தள போராளிகள் வழக்கம் போல ஷேர், கமன்ட் ஆப்ஷன்களில் தங்கள் வார்த்தைகளையும் ஏமோஜிக்களையும் கண்ணீரில் நனைத்து ஆர்.ஐ.பி எழுதிக்கொண்டிருந்தனர்.
அந்த பையன் தகப்பனை எரியூட்டக்கூட காசற்ற மழலை...
முகநூலும், ட்விட்டரும் அவனுக்கு நிறைய சொந்தங்களைக்கொண்டு சேர்த்தது.
போஸ்டிங்களையும் தாண்டிய செயல்களால் செயல்பட்டு
அனிலை போஸ்ட் மார்ட்டம் தாண்டி தகனமேடைக்கு நகர்த்த உதவிற்று.
அனிலை எரியூட்டுமுன் முகம் மூடியிருந்த துணியை விலக்கி இரு கன்னங்களையும் தாயென வருடி, "அப்பா " என்ற வார்த்தை சொல்லி,
கதறி, விம்மினான்.
புது தில்லியின் பழைய கட்டடங்கள் மீதிருந்த பறவைகள் சிதறியோடின.
நானும் என் முகநூல் திறந்து அவனுக்கென சில ஆறுதல் முயற்சிகளை ஆன்ட்ராய்ட முனைந்த போது...
அவன் எனக்குச்சொல்வதாயும்,
நானே எனக்குச் சொல்வதாயும்
கேட்ட ஒரே வாக்கியம்
"ப்ளீஸ், என்னைக்கொஞ்சம் தனியே விடுங்களேன் !😢",
தனிமையை விட பெரிய ஆறுதலில்லை.
விட்டுட்டேன்.
A Gladys Stephen Leave me alone evening!
Comments
Post a Comment