இருப்பின் தகவை தகர்த்தெறி.
👩🚒👩🚒👩🚒👩🚒👩🚒👩🚒👩🚒👩🚒👩🚒👩🚒👩🚒👩🚒
இருப்பின் தகவில்
நாமென்று எதுவுமில்லை.
நாம் கற்றதும் பெற்றதுமே
நம்மை வனைகின்றன.
நாமென்று எதுவுமில்லை,
நமதென்றும் எதுவுமில்லை.
கற்றுக்கொள்ளலின் வழியே பெற்றுக்கொள்கின்றோம்.
பெற்றுக்கொண்டதையே நிஜமென்று
நம்பிக்கொள்கின்றோம்.
இருப்பின் தகவாய் மாறியவைகளாலேயே இருக்கின்றோம்.
கேள்விகளால் செய்யும் வேள்விகளுக்கு வாராத பதில்களாலேயே விடைபெறுகின்றோம்.
ஆனாலும், தொடர்ந்து வாழ்கின்றோம்.
ஒவ்வொரு காலையும் போதிமரம்.
காலையை நேசித்து, காலையில் யோசிப்பவர்கள் நாளில் பாதியை கடந்து முடிந்திருக்கின்றார்கள்.
யோசனைகளுக்கு ஜெபமென்றும், பிராத்தனையென்றும் பெரிய பதங்களும் கற்றுத்தந்திருக்கின்றார்கள்.
உள்ளார் தகவுகளை உறுதிப்படுத்தும் உச்சாடனங்களாய் நேயம் மலரட்டும்.
அன்பு மட்டுமே விவாதங்களின் விடை. தேடல் தொலையாதது. காணலென்பது ஒரு வாழ்நாளிற்குள்ளான வரம்புதானே அன்றி அதையும் தாண்டியல்ல.
நம்மளவில் நாம் நின்றுவிடும் தகவுகளை தகர்க்காதவரை பகல்களில் வேற்றுமையில்லை.
புதிய பகல் புலரட்டும்.
தகவுகளை தகர்த்தெரியுங்கள்.
வாழ்க்கை அழகானது, அன்பால் ஆனது!
A Gladys Stephen morning wisdom!
187/200.
Comments
Post a Comment