ஜெயகாலை!

காலைகள் எப்பொழுதுமே
வெற்றியின் முகங்களே.
காலைகள் எப்பொழுதும் ஜெயபேரிகைத்தருணங்களே.
எப்பொழுதும் வெற்றி
என்றே நினை மனமே.
வெற்றி, வெற்றி, வெற்றியென்றே சென்றிடு நீ மனமே.
அதை சுற்றி, சுற்றியே வந்திடு நீ தினமே.
நல்லதை நினை நல்லதே நடக்கும். நாளும் இதை நம்பு.
நாவிலும் இதைச்சொல்லு.
நாளிலும் இது நன்நாளே
கொண்டாடிடு நீ மனமே.
போராடும் குணம் கொண்டு
போராட்டம் நீ வெல்லு.
போரடிக்கும் மாடுகள் போலே
ஓயாதே நீ சுற்று.
நெல் மணிகள் சிந்தும் வரை
நிற்காதே சுற்று.
ஜெயிக்கப்பிறந்தவர்க்கு
தினந்தோறும் ஜெயமே.
அதை ஜெயித்து, ஜெயிக்கவே ஜெயமோக தவமே.
ஜெயம், ஜெயம். ஜெய ஜெயமே, ஜெயித்துடு நீ மனமே!
Gladys Stephen Victorious Morning!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.