காலையில்...

காலையில் கடமைகள் நினை.
கருத்துடன் காரியங்கள் நினை.
சிந்தித்துச் செய் நீ வினை.
தீர்மானங்கள் தினமும்.
நிறைவேற்றலே தகும்.
உடலால், உளத்தால் தினமும் புதிது நீ.
சோர்வுகள் அயர்வுகள் மாற்றிடு க்ளாடி.
எனக்குள் நான் சொல்லும் மந்திரங்களால். உயர்கின்றேன்.
உணர்கின்றேன்.
உழைக்கின்றேன்.
நிற்காது செல்லும் பயணமும்
ஓர் நாள் நின்று விடும்.
செல்லாத பயணங்களாய் இல்லை.
எல்லாம் ஓர் யுகப்பிரளய
எரிமலை மூக்கில்
முளைத்த ரோஜா நாற்று.
துள்ளித்திரிந்ததொரு காலம்.
துணிவுடன் திரிய ஒரு காலம்.
காலம் எனக்குள்
கனவுகள் வைத்ததுண்டு.
இப்பொழுதெல்லாம் நனவுகளே
என் நடை.
யதார்த்தமே என் மொழி.
வருவதே வாழ்க்கை.
வருத்தங்கள் ஏதுமில்லை.
வானம் கூரை.
பூமி தரை.
நானுமோர் உயிர்.
வலியது வாழுமென்றான்
சார்ல்ஸ் டார்வின்!
கிளாடி வலியவள்.
Gladys Stephen Darvinisam.
Good morning!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.