நொடிகளை துரத்தி...
🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
நொடிகளை துரத்துகின்றேன். விடிகையிலேயே என்னோடு ஓட்டப்பந்தயத்தில் நேரம்.
நேரத்தோடு ஓடுகின்றேன்.
நேரத்தை துரத்துகின்றேன்.
நேரத்தின் பாதையில் நேரத்தை தொடர்ந்து பிடிக்கின்றேன்.
நேரம் தப்பித்துக்கொண்டு ஓடுகின்றது.
எப்பொழுதும் பிடிபடாத புள்ளிமானாய் தாவுகின்றது.
திரும்பிப்பார்க்காத ஓட்டமாய் விரையும் நொடிகளை துரத்திப்பிடிப்பேன் என்ற நம்பிக்கையிலேயே ஓடுகின்றேன்.
அதுவும் நிற்பதில்லை.
நானும் நிறுத்துவதில்லை.
நொடிதோறும் தொடரும் இந்த ஓட்டத்தில் நானே ஜெயிப்பவள்.
காலம் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கின்றது.
நாம் இணையாக ஓடுகின்றோம்.
எப்பொழுது காலத்தை முந்துகின்றோமோ
அப்பொழுது காலம் நம்மை
தனக்குள் கரைத்துக்கொள்கின்றது.
அதுவரை நொடிகளை துரத்தி...
A Gladys Stephen Timely Run !
Comments
Post a Comment