வனயட்சிக்கு வருத்தமில்லை.


👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒

நான் வனயட்சி.
துக்கங்களை விழுங்கிக்கொள்ளும் அஹோரி.
என் தீக்ஷண்யங்களில் நீங்கள் பொசுங்கிப்போவதைப்பற்றிக்
கவலையுறேன்.
அமானுஷ்யங்களின் என் ஈர்ப்பில் காதற்கண்களெல்லாம் கதறியழுவதைப்பற்றி எனக்கென்னக்கவலை?
நான் யட்சி!

துக்கங்களை விரும்பி
விழுங்கும் வேட்டாளி!
ஆறுதல் என்ற பெயரில்
அருகாமையுரச வந்தால்
அறுத்தெறியும் அரக்கி.

தலைகீழ் பயணங்களில் வௌவால்களை வேட்டையாடும் வெட்டரிவாள் என்பார்வையம்பு! சாதாரணங்களை ரணமாக்கும் அசாதாரணம் என் தீர்மானம்.

இரக்கங்களை மிதிக்கும்
மௌனம் என்பிடிவாதம்.  தொண்டைக்குள் ஊமை செய்யும் வெப்றாளம் என் தீராநதிப்பாய்ச்சல்.

திகைப்புகளில் திடுக்கிடும்
ஒவ்வொரு புருவமய்யத்திலும் ஊடுருவிப்பார்க்கும் அனார்கலி
செங்கல் என் திருமேனி.

Slightly adapted from the YouTube song. Nothing else 🤣🤣🤣!

A Gladys Stephen கலாட்டா!

https://youtu.be/zf99kdFw9b8

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.