சூரியனுக்கு வயதாவதில்லை.


😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

அறிவியலில் சூரியனை வயசாச்சென்கின்றோம்.
சூரியனுக்கு வயதாவதில்லை.

வயதே சூரியனைச்சுற்றித்தானடி கிளியே!
ஓடும் வாலிபத்தை காப்பது அன்பு மட்டுமே குயிலே.

சூரியனுக்கு வயதாவதில்லை!

பிறப்பிற்கே ஆயிரமாயிரம்
ஆராய்ச்சிகள் சூரியனே உன் மூப்பை என் மூப்பிலும் அறியேனே.

இன்னொரு காலை, இன்னொரு பகல் இன்றும், என்றும் என்றென்றும்
அதே சூரியன், அதே அன்பு!

ஞாயிறைக்கொண்டாடுகின்றேன்.
வாரம் தோறும் உனக்கு திருவிழா.
வார வைபவம்.
ஆரம்பமும் முடிவுமற்ற உனக்கு
நடு நிலைக்கிழமை.

கிழமைகளின் தகப்பனே.
திசைகளின் நாயகனே
உனக்கு வணக்கம்.

ஞாயிறு தொழுகின்றேன்.
நல்லவை நிலவட்டும்.

Happy Sunday Morning Wishes!
A Gladys Stephen Sunday celebration!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.