காலையின் வணக்கம்.
🕗🕗🕗🕗🕗🕗🕗🕗🕗
காலையில் நாம் சொல்லும்
வணக்கத்தை விட
காலையே நமக்குச் சொல்லும்
காலை வணக்கம் அருமை.
காலை நம்மை வரவேற்கின்றது.
நாம்தான் எழ மறுக்கின்றோம்.
அத்தனை வளங்களுடன் காலை வருகின்றது.
நாம் தான் வெறுமையென்றும், வறுமையென்றும் கழிவிரக்கம் பாடுகின்றோம்.
காலை கொண்டுவரும்
செல்வங்கள் அநேகம்.
பகுத்தறியா நெஞ்சங்களுக்கு பஞ்சமில்லை.
காலையை காலையில்
காலையோடு ஏற்றுக் கொள்வோம்.
காலைகள் சிறக்கும்.
பகலின் சிறப்புகள்
காலையின் செருப்புகளில்
தான் நடக்கின்றது.
மாலை வரைக்கும்
மங்காத ஒளியாய் வழி வாழ காலையைக்கொண்டாடுவோம்.
காலைகளை புரிந்து கொள்பவர்கள் காரியங்களை வெல்கின்றனர்.
வெல்க!
A Gladys Stephen morning!
Comments
Post a Comment