காலைகள் தொடரும்.
🌽🌽🌽🌽🌽🌽🌽🌽
முடிவுறாத காலைகளின்
முகவுரைகளை காலைகள் தாங்களாகவே எழுதிக்கொள்கின்றன.
அவற்றின் குறைந்தபட்ச பொருளுரைகளை மட்டுமே நான் எழுதுகின்றேன்.
இவற்றையும் தாண்டிய
உலகளாவிய வாழ்வியல்
கருத்துக்கள் ஒவ்வொருவர் வாழ்விலிருந்தே வடிவம் பெறுகின்றது.
நான் அபிப்பிராயங்களின் ஆலோசனைகளாயே நின்றுவிடுகின்றேன்.
காலைகள் முடிவதில்லை.
வாழ்வு அனுமதிக்கப்படும்
ஒவ்வொரு தருணத்திலும்
நாம் வாழ பிரயத்தனப்படுகின்றோம்.
அதன் சாட்சியாயே நம்முடைய அகமும்-புறமும்!
அகத்தின் அழகு முகத்திலாம்.
நான் அகத்தின் இருப்பை வார்த்தைப்படுத்துகின்றேன்.
நீங்கள் அதை அர்த்தப்படுத்துகின்றீர்கள்.
காலைகள் சிலருக்கு கசப்பு.
என் எழுத்துக்களில் உங்களுக்கான மருந்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.
என் எழுத்துக்கள் முடிந்து போகலாம். காலைகள் முடிவதில்லை!
இக்காலைகளின் வாழ்த்தாய் நான்.
வாசிப்பாய் நீங்கள்!
வாழ வாழ்த்துகள்!
A Gladys Stephen Greetings!
Comments
Post a Comment