கொஞ்சம் பயணம். கொஞ்சம் நிம்மதி.

ஆசைகள் பெரிதாயில்லை.
கொஞ்சமே. 
பெரிதாய் சாதிக்க பேராசையில்லை. மாலையே.
உயரப்பறந்து விழேன்.
உழலும் புழுவாயுமிரேன்.
நடந்தால் நாலடி,
படுத்தால் ஆறடி.
பரலோகவடியறியேன்
பாதாள பாழடியுமறியேன்.
இருப்பின் தகவை
தக்கவைத்தலே
என் பயணம்.
வேகமில்லை.
கொஞ்சமாய் விவேகம்.
வீரமில்லை கொஞ்சமாய் தீரம்.
தீவிர வாதமெலாம் எனக்கில்லை. தீராப்பசிகளுமில்லை.
அன்னம் வேண்டுவோர்
அருகிருக்க ஆசை.
வாழ்ந்தலில் நானுமிருந்தேனென வாழ்ந்து விட்டு போகின்றேன்.
நிம்மதிகள் நிறைய வேண்டும்.
நிமிர்ந்த நன்னடை வேண்டும்.
மாலையே நீயும் கூட இருந்தால் நன்றாயிருக்குமோ என்றும் தோன்றுகின்றது.
இரு!
Gladys Stephen evening plea!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.