இருக்க இடமில்லை!
உலகெலாம் இடம்.
எங்கெங்கும் இருப்பிடம்.
காடு திறந்து கிடக்கின்றது.
எங்கெங்கும் இருப்பிடம்.
காடு திறந்து கிடக்கின்றது.
கடல் அலைக்கரம் விரிக்கின்றது.
பாலை பயணப்பட இழுக்கின்றது.
பாலை பயணப்பட இழுக்கின்றது.
நிலவோடும், விண்மீனோடும் இருக்க வானமும் அழைக்கின்றது.
கடைசியிலாவது வாவென பாதாளமும் அணைக்கின்றது.
இடமாயில்லை பூமியிலும் வாகனத்திலும்.
எரிமலை உச்சியில் கூட இலவம்பஞ்சிக்கும் இடமுண்டு!
எரிமலை உச்சியில் கூட இலவம்பஞ்சிக்கும் இடமுண்டு!
என்ன ...
பஸ்ஸில் தான் சீட்டில்லை.
பஸ்ஸில் தான் சீட்டில்லை.
கால்கடுக்க தொங்கு தவம் செய்தாவது மாலையே உன்னை வாழ்வேன்.
நாமெலாம் சாமான்யர்.
வருத்தங்கள் நடுவிலும்
வாழ்வை ருசிக்கும் சாதாரணர்.
வருத்தங்கள் நடுவிலும்
வாழ்வை ருசிக்கும் சாதாரணர்.
ஒரு அதிர்ஷ்டக்காற்றில் கோடிகள் விளையலாம்.
இந்த சுகமான சுமைகள் கிடைக்காது.
இதுவும் கடந்து போகும்.
இடமும் கிடைத்துவிடும்.
இடமும் கிடைத்துவிடும்.
ஏதோவொன்றில்!
மாலை மனசே வணக்கம்!
A Gladys Stephen evening standing!
Comments
Post a Comment