மாலையில் யாரோ மனதோடு பேச...

பேசும் வார்த்தைகள் வேதமடி.
அதை பேணிக்காத்தலே போதுமடி.
சத்தியம் நித்தியம் அதை சொல்லிடும் சத்துவம் தத்துவம்.
வாழலின் வலிகளில் வித்தகம்
அதை வேண்டி வெல்வது நித்தமும்.
கூடிய கைங்கர்யம் குதூகலம்
அதை கும்பிட்டுத் தொழுவது குவலயம்.
சொல்லும் சொல்லிலே சொர்க்கம் அதைச்சொல்லாமல் செல்வதில் ஏன் தயக்கம்?
மானுடம் வாழ்வது நேசத்தில் அதை பகிறாமற் போவதே பாதகம்.
ஆயிரம் உண்டிங்கு ஆதங்கங்கள்
அதை ஆற்றாமல் போவதே தவறிதம். விடியலும் அடையலும் வினை வசம் அதை விதைக்காமற் போவது சதிவசம்.
நல்ல வார்த்தைகள் என் வசம்.
என் மாலையே அதை எந்நாளும்
சூடுதற் உன் வாசம்.
பாடு பொருள் அன்பு பாடா பொருள் வம்பு.
பாட்டிலும் ஏட்டிலும் நான் வாழ்வேன்.
என் வீட்டினிற் விளக்காய்,
என் சிந்தையின் சந்தமாய் நீ!
Gladys Stephen evening appraisal!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.