காலையை வணங்கு!
👰👰👰👰👰👰👰👰
காலையை வணங்கு.
காலையில் வணங்கு.
கருத்துடன் கண்டு
கனிவுடன் வணங்கு.
உயிரினைப் பேணும்
காலையைப் பேணு.
கருத்தாய், கரிசனமாய்
காலையைக்காணு.
கண்கள் ஒளி பெற
காலையைக்காணு.
கடமைகள் சரிவர
காலையில் எண்ணு.
எண்ணங்கள் செயல்பட
காலையில் சிந்தி.
சிந்தனைச்சிறந்திட
காலையில் சிந்தி.
நினைவுகள் மேம்பட
காலையில் பழகு.
நல்லவை அருகிட
காலையில் பழகு.
காலையைப்பழக்கு.
காரியம் கைகூட
காலைகள் வாய்ப்பு.
காரியம் கைகூட
காலையில் முனைக.
முனைந்தவை முடிக்க
காலையில் எழுக.
காலை எழுவோர்
மாலையை ஜெயிப்பர்.
நாளினை ஜெயிப்பர்.
நாவினை ஜெயிப்பர்.
நாநிலம் ஜெயிப்பர்.
காலையில் கல்வி
கடைசிவரை வெற்றி.
வெற்றிகள் எல்லாம்
காலையின் சித்து.
காலையில் தொட்டால்
காரியம் வெற்றி.
இதை உணர்ந்தாலே
வாழ்வு முழுவதும் கெட்டி!
A Gladys Stephen Morning Wake Up call.
Comments
Post a Comment