நீ தரும் அன்பை...

எனக்குத் தெரியும் உன் வலிகள்.
ரணங்கள்.
குருதி சுமக்கும் உன் குறு வயிற்றுக்கனவுகளின்
கண்ணீரும் தெரியும்.
ஆறுதல்களால் அடக்கி விட முடியாத பேரழுகை உன் அடிவயிற்றுக்கேவல்.
ஓரு பாசப்பிரளயத்தின் உடற்கூற்றை மொழிபெயர்ப்பது என் வேதிம வித்யை.
ஹார்மோன்களின் கதறலுக்கு மருத்துவம் எழுதும் மருந்து சீட்டை மனப்பாடம் பண்ணியவள் நான்.
விடைகள் தெரிந்த கேள்வி நான்.
அமானுஷ்யங்களின் உச்சாடனங்களை நானும் நம்பியிருப்பேன்.
உன் கதறல் கேட்க்கப்பட்டிருந்தால்...
கடைசி வரை கேட்க்கப்படாமல் போன உன் கேவல்களின் மழையில் நானும் நனைந்திருந்தேன்.
சகியே என்னையே தாலாட்டேன்.
மடி வைத்து கொஞ்சேன்.
தாயே என்றழைக்கின்றேன்.
உன் அமுத கலசங்களின் பாச ஊற்றில் என்னை நீராட்டு.
மாலையே நீ தீராநதி.
ஓயா கவிதை.
தேயா நிலா.
மறையா வான்!
கரம் கோர்த்து அழைத்துச்செல்.
பள்ளி முடிந்து வீடு வருகின்றேன்.
அம்மா!
Gladys Stephen home evening!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.