இது முடிவல்ல..

இன்னும் இரண்டு நாட்களில்
இரட்டை சதம் தொடப்போகும் 
இந்த பொழுது கவிதைகள் ( Pethusamy Venkatachalam உபயம்)
ஒரு தற்காலிக நிறுத்தத்திற்கு வருகின்றது.
இதற்கென பெரிதாக ஆராய்ச்சி
எதுவும் பண்ணவில்லை. கற்றதும்-பெற்றதும், வாசித்ததும்-யோசித்ததும்,, சந்தித்ததும்-சிந்தித்ததும்களிலிருந்து
சிறு, சிறு துண்டுகள்.
நிறைய ஊக்கப்படுத்தினீர்கள்.
பாராட்டினீர்கள்.
ஆனால், எல்லா ஆரம்பங்களுக்கும்
ஒரு முற்றுப்புள்ளி வேண்டும்.
சலிப்பு என்ற நிலையை எட்டுமுன்.
நாமாக நின்றுவிடுவது நலம்.
இது ஒரு நல்ல அனுபவம்.
என் எழுத்தைப்பற்றி நிறைய????? கேட்டீர்கள்.
இதற்கு ரகசியமென்று எதுவுமில்லை.
ஆன்ட்ராய்டில் எழுத சுலபமாயிருக்கின்றது.
எழுதுகின்றேன்.
நீங்கள் எழுதும் போது
இதெல்லாம் சும்மாவே.
நீங்கள் எழுதவில்லை அவ்வளவே!
எழுதுங்கள் காத்திருக்கின்றேன்.
அன்புடன்,
Gladys Stephen conclusion!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.