காலைகள் ஓய்வதில்லை.
💪💪💪💪💪💪💪💪💪💪
நானும் நீங்களும் ஓய்ந்து போகலாம்.
காலைகள் ஓய்வதில்லை.
சுற்றும் சூரியன் ஓய்வதில்லை.
வானம் ஓய்வதில்லை.
பருவ காலங்கள் ஓய்வதில்லை.
வாழ்க்கை எனும் ஒட்டுமொத்த
புரிதல் ஓய்வதில்லை.
மானுடர் ஓயலாம்
மானுடம் ஓய்வதில்லை.
அன்பு ஓய்வதில்லை.
முயற்சி ஓய்வதில்லை.
இவையெல்லாம் நமக்குள்
எவ்வளவு தூரம் உண்டோ
அவ்வளவு தூரம் இவற்றை தடுக்கும் சோம்பலும் நமக்குள் உண்டு.
சலிப்பும் உண்டு.
" என்னத்த வாழ்க்கை?" என்ற சோர்வும் உண்டு.
வாழுங்கள்.
வாழ்வோம்.
நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்வோம். திருத்திக்கொள்வோம். புதிப்பித்துக்கொள்வோம்.
இந்த நாள் புதிது.
இதன் கடமைகள் புதிது.
இதன் அணுகுமுறைகள் புதிது.
வெல்வோம். வாழ்வோம்.
இன்று நமது நாள்.
காலைகள் ஓய்வதில்லை!
A Gladys Stephen unending mornings!
Comments
Post a Comment