மாலைகள் ஓய்வதில்லை.

மாலைகள் ஓய்வதில்லை.
மாறாத வாழ்வில் மாற்றங்கள் 
மாறி மாறி வருவது மாறாத மாற்றம்.
மாற்றமற்ற மாலைகள் ஓய்வதில்லை.
ஒவ்வொரு மாலையும் ஒரு பேராறுதல்.
உள்ளுக்குள் உள்ள எத்தனையோ சோகங்களை தாங்கும் ஒரே சுமை தாங்கி மாலையே.
கைநடுங்கும் போதையானுக்கு ஒரு கோப்பை மது. பேதைக்கு மாலை.
மாலையோடு மௌனிக்கும் கணங்களில் உருவாவதே அச்சடிக்கப்படாத காவியங்கள்.
உச்சரிக்கப்படாத சோகங்களால்
உருவாவதே கண்ணீர்.
அர்ச்சிக்கப்பட கோர்த்தெடுக்கப்பட்ட கண்ணீர் சரங்களில் ஒரு பிந்தைய நாளின் குமுறலும், கைநெகிழ்ந்த நேசத்தின் ஞாபகங்களும் ஆதரவின்றி அழும்.
மாலைகள் ஓய்வதில்லை.
மணக்குமா என்னவா தெரியாது.
அவற்றின் இரத்தாம்பர விழிகளின் தேடலும் பாடலும் எனக்கு மட்டும் கேட்க்கும்!
Gladys Stephen evening edition!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.