மௌன காலை .

பேரிரைச்சலோடு முடிந்த பெரும் பொழுதுகளின் பேராசைகளோடு பயணிக்கின்றோம்.
ஒவ்வொன்றாய் கட்டி வைத்த சரங்களின் மீது தவழாத நினைவுகளை தவிர்க்கின்றோம்.
எத்தனை எத்தனை வாக்கிய அமைப்புகள் அத்தனைக்கத்தனை மனிதர்கள்.
மாற்றுச்சிந்தனைகளில் மாறுபட்டு, முரண்படும் மனிதச்சிதைவுகளாலேயே மனமரணங்கள். ரணங்கள்.
தேடலாய் தேம்பியலைந்தவர் நாட்களெல்லாம் தேக்கிக்கூட வைக்கயியலாதபடி தேங்கிய
குட்டைகள்.
வலுவிழந்த கால்களும் மனசும் கண்ட ரணங்களின் ஓய்வைத்தானே நேற்றின் இரவெனும் மயிலிறகு வருடிற்று.
நேசிப்பவர்களையே அதிகம் வெறுக்கின்றோம். காதல் முற்றத்தில் முத்தத்தாஜ்மஹால்களுக்குப்பதில் கள்ளிப்பெட்டிக் கல்லறைகளுக்கு சதியளவு பார்க்கின்றோம்.
உள்ளாரனுபவமே நம்மை வனைகின்றது. ஆடாத மனசாகி கல்லாகி வறண்ட கண்களில் இன்னொரு ஈரம் என்பதைக்குறித்து அச்சமே மிச்சம்.
எத்தனை அன்பெனும் உளிகள் போராடினாலும் நமக்கு இழைக்கப்படும் இயல்பு மறுப்பை மறுக்க மறுக்கின்றோம்.
தடாலடிதிருப்பங்களுக்கு வாழ்க்கை இரண்டரை மணிநேர தெலுங்கு சினிமா அல்ல.
இயல்புகளில் மாறாத இறுமார்ந்த நெஞ்சங்களோடு நாம் நடத்தும் மௌன யுத்தங்களால் விடியும் ஒவ்வொரு காலையும் மௌனமாயே
விடிகின்றது.
எல்லோருக்கும் ஒரு நப்பாசை ஏதோ ஓர் மந்திரச்சொல் கபாலம் குடைந்து சலவை செய்யாதோவென.
அந்த மந்திரக்காலை இக்காலையாய் கூட இருக்கலாம்.
விக்ரமாதித்யன் கதையில் இப்படி ஒரு வாசகம் ஆரம்பமாகும்...
" தன் முயற்சியில் சற்றும் தளராத... "
Gladys Stephen energetic morning!
Good morning!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.