நீ நலம்

.
🤗🤗🤗

காலையே நீ நலம்.
நான் நலம்,
ஆகவே நீயும் நலமே.

என் நினைவுகளாலேயே நீ.
ஆகவே நீ நலம்.

ஒவ்வொரு இரவிலும் நான் உடைத்துப்போட்ட எந்திரி!

காலையில் என்னை நானே
செய்து கொள்கின்றேன்.

என் கணினி மொழியை நானே எழுதிக்கொள்கின்றேன்.

என் ஜாவா, சி++ தளங்களில் எனக்கான மனசாட்சி மொழிகளில் நானே.

இந்த மனுஷியை ரீபூட்டில் அவளே ஓட்டிக்கொள்கின்றாள்.

ஆன்டி வைரஸ் அமைப்பையெல்லாம் வாழ்க்கையே தகவமைத்துத் தந்திருக்கின்றது.

எந்த ப்ராக்ஸிவேரும், மால்வேரும் இன்பிற சதிகளும் இதை உடைக்கவியலாது.

நான் ஆன்மா என்றழைக்கப்படும் பதம்.
ஆவி என்று சொல்லப்படும் அதிசயம்.

மானுட மகுடிகளில், காலையே,
நான் மயங்கேன்.

என்பெயர் முதற் கொண்டு நான் தீர்மானித்ததில்லை.

எதையும் எதிர்கொள்வேன்.
காலையே கூட எழு, பகலாகு, மதியமாகு, இரவாகு.

இன்றில் வாழும் நான் நேற்றிலிருந்து வந்த நாளை!

இந்த காலை இனிதாகட்டும்.
இன்று இனிதாகட்டும்.

இன்றை, இன்றில் இன்றே வாழ்வோம் இன்றேல் இல்லை இன்றின் இன்று!

A Gladys Stephen Living Present!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.