ஓயாத சூரியன்.
சூரியன் ஓய்வதில்லை.
மாலையென்பது மரணமன்று.
இன்னொரு பிறப்பிற்கான கர்ப்பம். மாலையென்பது திரும்பி வராத சூரியனன்று.
திருப்பத்தில் மறைந்த பார்வை. விடியலின் பாதையில் சூரியத்தேர்வலத்தை நேரிலே காண்பேன்.
ஒவ்வொரு மாலையிலும்
ஒரு உதய சூரியன் தீவிரிக்கக்காத்திருக்கின்றான்.
தன்னை சுடர்கள் நிரப்பிக்கொண்டு கரும்போர்வை மூடிக்கொள்கின்றான்.
சந்திர வான்கோழியின் மயிலாட்ட ஒத்திகையில் மதிமயங்கி உறங்குகின்றான்.

பகுத்தறிவுப்பகலவர்க்கு
ஒன்றை நான் சொல்வேன்
என் மனவானின் நாளே என்னுதயமும்-என் மாலையும்.
ஒன்றை நான் சொல்வேன்
என் மனவானின் நாளே என்னுதயமும்-என் மாலையும்.
இது பொன்னந்தி, பொன்விடியலின் அச்சாரம்.
வெளிச்சம் வருமென சேதி சொல்லும் வான் வாசகம் விடியலிலும் கிரணங்கள், அடையலிலும் கிரணங்கள்.
விடியலிலும் பறவைகள், விலங்குகள். அடையலிலும் பறவைகள், விலங்குகள்.
வெளிச்சம் வருமென சேதி சொல்லும் வான் வாசகம் விடியலிலும் கிரணங்கள், அடையலிலும் கிரணங்கள்.
விடியலிலும் பறவைகள், விலங்குகள். அடையலிலும் பறவைகள், விலங்குகள்.
வெளிச்ச வேறுபாடும், வெப்பச்சூழலுமுமே வேறு, வேறு. விடியலுக்காக ஏங்க வைக்கவே
சூரியன் அடைகின்றான்.
சூரியன் அடைகின்றான்.
ஏக்கம் தீர்க்கவே காலையில் உதிக்கின்றான்.
நோயும் நீயே,
அது தீர்க்கும் மருந்தும் நீயே.
வள்ளுவப்பாடலாய் இவ்வரியும் நீயே.
நோயும் நீயே,
அது தீர்க்கும் மருந்தும் நீயே.
வள்ளுவப்பாடலாய் இவ்வரியும் நீயே.
உனக்கென காத்திருக்க உனக்கு விடை தருகின்றேன்.
நீ வரக்காத்திருப்பதில்
பாதசுவட்டு வலிகளெல்லாம்
பஞ்சாட்டம் பறந்து போகுமே.
பாதசுவட்டு வலிகளெல்லாம்
பஞ்சாட்டம் பறந்து போகுமே.
உன் பயண பூத்திருப்பில்
என் பயண வேர்திருப்பெலாம் வேதனையில்லை சூரியனே!
என் பயண வேர்திருப்பெலாம் வேதனையில்லை சூரியனே!
A Gladys Stephen Sun strokes in the Evening!
Comments
Post a Comment