மாலைகட்டும் மாதவம்.
👸👸👸👸👸👸👸👸👸
மாலை ஒரு நாளின் அறிக்கை. நடந்தவைகளின் மீள்சோதனைக்களம்.
சுயபரிசோதனைக்கான தருணம்.
திருப்பங்களில் தொலைந்த எத்தனையோ முயற்சிகளின்
மீதைய பெருமூச்சு.
நல்ல ஆரம்பங்கள் நல்லவையாகவே முடிய வாய்ப்பற்ற நிலையில்.
எத்தனை தூரம் ஏறி வந்திருக்கின்றோம் என்பதை அளந்து பார்க்கும் ஆராய்ச்சி வேளை.
எதை தவிர்த்திருக்கலாம் எதை முயற்ச்சித்திருக்கலாம் என்பதை உணர்த்தும் ஈமக்கிரியையோசனை.
தானாய் தான் விடியும்.
தானாய் தான் அடையும்.
ஆனாலும், நானாலே என்
நாட்கள் மாதவமாகும்.
A Gladys Stephen evening discourse!
Comments
Post a Comment