வலிமாலை...

இதுவரை பாமாலையில்
உங்கள் கண்களுக்குள் வளைய வந்த Gladys Stephen வரிகள் இன்று
சின மாலையால் வலி மாலை தொடுக்கின்றது.
பயமில்லா கற்றலுக்கு பள்ளிக்கல்வித்துறை
போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது.
தொடுதலென்பது ஒரு காலத்தில் ஆசீர்வாதம்.
இன்று அசிங்கம்.
மடிவைத்து கொஞ்சியது
ஒரு காலத்தில் குதூகலம்
இன்றோ குற்றமும் - செயலும்.
Bad touch.
Good touch சொல்லித்தருவதே பெற்றோரின் வலிந்த வேலை,
வேறு வழியற்ற வேலை.
குற்றங்களை சகித்து வாய்மூடி மனச்சிதைவிலும், மனநோயிலும் மாண்டுடைந்த மாணவ-மாணவியர் எத்தனை, எத்தனை 😈?
ஒரு யுகத்திற்கான வலிகளோடு
வாழும் மாணவப்பருவ ஞாபகங்கள் மணவாழ்விலும் மண்டையைப்பிளக்கின்றதை எத்தனையோ மனைவியர் சொல்லத்தெரியாமல் திக்பிரமைக்காட்டில் திகைத்து நிற்கின்றனரே.
அம்மாக்களாய் மாறியபின்னும்
துக்கம் நெஞ்சை அமுக்குகின்றதே.
ஒரு சின்ன தொடுதல் மிகப்பெரிய குற்றம்!
உணருங்கள் உணர்த்துங்கள்.
மானுடம் வாழட்டும்!
Zoom பண்ணி போஸ்டரை வாசித்து ஷேர் பண்ணுங்கள் நம் அடுத்த தலைமுறை குற்ற உணர்வில் சாகாதிருக்கட்டும்.
வலி மாலையிலும் என் வாழ்த்துகள்!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.