எனக்குள்...
🤱🤱🤱🤱🤱
எனக்குள் விடியலாய், மாலையாய்,
நாளின் நடனங்கள்.
தடங்கள் தாங்கும் ரயில் பயணம்
என் நாட்கள்.
நிற்காது செல்லும் என் பயணத்தின் தோழமையாய் பகலும் இரவும்.
நாளும் பொழுதும் நான் கடக்கும் தொலைவுகளின் பொழுதுகளே
உங்கள் பார்வைக்கு படையல்கள். கற்பிதங்கள் ஏதுமில்லை.
தப்பிதங்கள் ஏதுமில்லை.
ஒவ்வொரு மாலையிலும்
காலைக்காய் ஓய்கின்றேன்.
ஒவ்வொரு காலையிலும்
மாலைக்காய் நகர்கின்றேன்.
நிற்காது நகரும் நாட்களில் நானுமிருப்பேன்.
நான் சென்றபிறகும்
காலையோடும், மாலையோடும்
என் பெயரும் இருக்கும்!
எனக்குள் நாட்கள்.
நாட்களுக்குள் நான்.
A Gladys Stephen day!
Comments
Post a Comment