பொழுதின் பிறப்பே..
பொழுது பிறந்தது.
காலை.
எப்பொழுதும் பொழுதாய்.
எப்பொழுதும் பொழுதாய்.
அதை காலை என்றும்
மாலையென்றும்
பலப் பல பெயரிட்டுப்பார்க்கும் பொழுதெல்லாம்...
மாலையென்றும்
பலப் பல பெயரிட்டுப்பார்க்கும் பொழுதெல்லாம்...
பொழுதின் பிறப்பே காலைக்கதிர்தானே?
நானும் பொழுதும்
நாளும் எழுகின்றோம்.
பொழுதுகள் என்னோடு.
நான் பொழுதோடு.
நாளும் எழுகின்றோம்.
பொழுதுகள் என்னோடு.
நான் பொழுதோடு.
என் பொழுதுகளை எழுதும் எழுத்து
என் தீரா நடை, ஓயாப்பயணம்,
ஓய்விலா கடமைகள்.
என் தீரா நடை, ஓயாப்பயணம்,
ஓய்விலா கடமைகள்.
சலிப்புறேன்.
நானும் பொழுதும்
சேர்ந்தே பிறந்தோம்.
நான் எழுகையில் எழுந்து,
நான் துயில்கையில் துயின்று
எனக்குள் நானாய் என்னைப்பிரசவிக்கும்
பொழுதுகளின் பிறப்பில்
என்னை உணர்கின்றேன்.
சேர்ந்தே பிறந்தோம்.
நான் எழுகையில் எழுந்து,
நான் துயில்கையில் துயின்று
எனக்குள் நானாய் என்னைப்பிரசவிக்கும்
பொழுதுகளின் பிறப்பில்
என்னை உணர்கின்றேன்.
எனக்காய் உலவி என்னுள் உலவுகின்றேன்.
நீயும் நானும் ஒன்று.
என்றும் விடியும் காலையில்
என்னோடு காலை,
காலையோடு நான்!
என்றும் விடியும் காலையில்
என்னோடு காலை,
காலையோடு நான்!
பொழுதுக்கு வாழ்த்துகள்!
அதை பொழுதில் வாழ்பவர்க்கும் வாழ்த்துகள்!
அதை பொழுதில் வாழ்பவர்க்கும் வாழ்த்துகள்!
பொழுதை பயனுற பேணுங்கள்.
A Gladys Stephen morning moments!


Comments
Post a Comment