சூரியச்சி.
சூரியச்சியே பாத்துப்போடியம்மா.
நீள் பயணம் நிலம் காக்கும் நின் பயணம்.
அனல் சுமந்துச்செல்லும் பருவகால பல்லக்கி.
மானுடம் வாழ, மழையும் வாழ வானும் பூமியும் காக்கும் வெளிச்சாச்சி, பாத்துப்போ சூரியச்சி.
நீள் பயணம் நிலம் காக்கும் நின் பயணம்.
அனல் சுமந்துச்செல்லும் பருவகால பல்லக்கி.
மானுடம் வாழ, மழையும் வாழ வானும் பூமியும் காக்கும் வெளிச்சாச்சி, பாத்துப்போ சூரியச்சி.
சுட்டெரிக்கும் பார்வையால பாத்துவிடாத, கண்ணையும் மூடிடாத ராசாச்சி. பாதைதாண்டி போய்விடாத பாராச்சி. பாவம் நாங்க எங்க போவோம் சூராச்சி.
குடையெல்லாம் புடிச்சவங்க கும்பிட்டுக்கேக்குறாக நடுப்பகலு மண்டையில சுகரெல்லாம் உறிஞ்சாத.
ஆரிருக்கா எமக்கு ஆதரவே நீ எமக்கு.
ஆரிருக்கா எமக்கு ஆதரவே நீ எமக்கு.
பகல் சாய்ஞ்சு போகையில
பல்லக்கு தேயையில
மறக்காம நினைப்போமே
பயிராட்டம் சிலிர்ப்போமே.
பல்லக்கு தேயையில
மறக்காம நினைப்போமே
பயிராட்டம் சிலிர்ப்போமே.
சாயங்காலம் வந்திடுமே சலிக்காமச்செல்வோமே.
மாலையா மாறினாலும்
உன் பேரு சூரியச்சி!
மாலையா மாறினாலும்
உன் பேரு சூரியச்சி!
நாளைக்கும் வரணுமின்னு
மறக்காம வேண்டிகிட்டு
வேலைக்கு போவோமா,
வேளைக்கு தின்னுபுட்டு.
மறக்காம வேண்டிகிட்டு
வேலைக்கு போவோமா,
வேளைக்கு தின்னுபுட்டு.
சூரியச்சியும், நானும் வேலைக்கு கிளம்பியாச்சு.
அப்ப நீங்க?
Get set go!
A Gladys Stephen morning relay!
Good morning friends!
Comments
Post a Comment