எப்படியிருக்கீங்க?
நல்லாயிருக்கீங்களா?
மாலையே என்ன பதில் சொல்லலாம்?
நலமே எனவா ?
இப்ப பரவாயில்லைன்னு பகிரவா?
கொஞ்சம் பெட்டர்னு கொட்டவா?
நலமே எனவா ?
இப்ப பரவாயில்லைன்னு பகிரவா?
கொஞ்சம் பெட்டர்னு கொட்டவா?
நல்லாயிருத்தலென்பது உடலிலா, மனதிலா மாலையே?
எந்த நலம் நாடுகின்றாய் நாவே?
என்ன நலம் சொல்லவேண்டும் காதே?
என்ன நலம் சொல்லவேண்டும் காதே?
நலம் விழைய விரும்பும் நீவீர் என் நலத்திற்காக ஒரு வார்த்தைப்பூச்செண்டாவது அனுப்புனீரா?
என் பெயரில் இல்லாத சாமிக்காவது அர்ச்சனை செய்தீரா...
என் கேள்வி தவறா மாலையே?
நலம் விரும்புதல் நாகரீகம், நட்பிதம். கோப்பைத்தேனீர் குதூகலம், குசலம், கும்பிடம்!
🤣
நலம் விரும்புதல் நாகரீகம், நட்பிதம். கோப்பைத்தேனீர் குதூகலம், குசலம், கும்பிடம்!
ஆனாலும்....
ஆத்மார்த்த நேசங்களின் கேள்விகள் புறப்படுமுன்,
விடைகளின் வழியேயே வார்த்தைகள் வந்து விழும்.
ஆத்மார்த்த நேசங்களின் கேள்விகள் புறப்படுமுன்,
விடைகளின் வழியேயே வார்த்தைகள் வந்து விழும்.
அவைகளின் குசலங்கள் மரபுகளின் மனப்பாடமன்று.
மனசாட்சியின் புகைப்படங்கள்!
மனசாட்சியின் புகைப்படங்கள்!
நல்லாயிருக்கீங்களா மாலையம்மா?
😍
A Gladys Stephen evening enquiry.
Comments
Post a Comment