குரு தேவோ...

இந்த காலை
இந்த தேசமெங்கும் குருக்கள் காலை.
ஆசிரியர் தினம்!
கொண்டாடப்படும்
குதூகலத்தின் தத்துவம்.
புகழலும் புகழலுக்கு
தகுதி கொள்ளலும்.
நம்மை உருவாக்குதலில் பங்குகொண்ட இம்மனிதரில் நிறைய நினைவுகள் கொண்டுள்ளோம்.
நேர்-எதிர்!
இரண்டிலுமாய் இல்லாத துறைகளில்லை.
ஆயினும், தத்துவார்த்த சித்தாங்களின் படியும், சமுதாய தகவமைப்புகளின் படியும் ஏன் மதங்களின் வேதங்களின் படியும்...
குரு மகத்தானவர்!
ஏகலைவ ஆர்வம் தவறாய் பார்க்கப்பட துரோணாச்சார்ய பெருமிதங்கள் தேவைப்படுகின்றன.
ஆயினும்...
கற்றுக்கொடுத்தலில் ஆன்ம தவம் புரியும் அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் அன்பான ஆசிரியர் தின போற்றல்கள்.
எழுத்தறிவித்து இறைவராகும் பெருமை உங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது!
How blessed you are!
Deserve it, always!
Gladys Stephen Teachers' Day Morning Wishes!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.