மாலையில் மாலையே மனதோடு பேச...


🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

நான் விடியலின் மகள்.
எனக்கென்று அரிதாரங்கள் இல்லை. அதிகாரங்கள் இல்லை.

நிறைய அன்புண்டு.
குறைந்த பட்ச அறிவுண்டு.
நான் இயலாதவள்.
நொறுக்கப்பட்டவள்.
வெறுக்கப்பட்டவள்.
துரத்தப்பட்டவள்.

மரணத்தின் ஒத்திகையை மனசாரப்பார்த்தவள்.
எனக்கு மரணமில்லை.

பிறப்பின் வேதிமம் படித்தவள்! அமானுஷ்யங்களின் எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்ஸன்சை உணர்ந்தவள்.

சும்மா அதிருதுல்ல
என்பதிலெல்லாம்
ஆடிப்போய்விட மாட்டேன்.

என் பாதையின் பவனியென்பது கவர்சிகளின் கவிழ்ப்பன்று.

நான் ஆல கால விஷம்.
ஆதிஷேஷண அமிர்தம்.
சும்மா கடைந்தால் கிடைத்துவிடும் பாக்கட் பாலல்ல, தயிரல்ல,
மோரல்ல & நெய்யல்ல.

என் சுயமரியாதையை
ஒரு பின்ச்சில் வெல்லவியலாது. நானொரு பேய்ப்பூச்சி. பிள்ளைப்பூச்சியன்று!

நில்லாமல் சுழல்வது நானும் தான்!
மாலைகளில் மட்டுமே நான் மௌனி!

விடியல் சுமந்து வரும் வேட்டைக்காரி.
வீராளி!

ராஜாளி போல என் பறப்பின் பரப்பு.
மாலையில் பேசும் மாலையெல்லாம் கடனல்ல!

முதலீடு!

A Gladys Stephen evening investment!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.