பயணங்கள் முடிவதில்லை...
👣👣👣👣👣👣👣👣👣👣👣
வாழ்வே ஒரு பயணம் தான்.
அது தொடர் பயணம்.
நடை, இரு சக்கரம், மூன்று சக்கரம், சிற்றுந்து, பேருந்து, தொடரி,
ஆகாய, கடல் மற்றும் அண்டவெளி என பயணங்கள் முடிவதில்லை.
என் ஆத்மாவின் பயணங்களும் முடிவதில்லை.
நானோர் முடிவிலி.
என் பயணங்களும் தான்.
மௌனத்தில் என் கழுத்தைச்சுற்றி நானிழுத்த தேர்வலங்களில் விட்ட மூச்சுக்கள் நாடோடிப்பாடல்களின் பேச்சில் இருக்கும்.
மனமும் காலும் சென்ற
வீடற்றவள் பயணம் என் கண்களில் இப்பொழுதும் பயணமாகின்றது.
வழிந்தோடிய காவேரியின் பவானியை விட என் கண்ணீரின் பரப்பு மிகையதிகம்.
இப்பொழுதெலாம் பயணங்கள் முடிவதில்லை.
என் பாதைகளின் திசைகளுக்கு முடிவில்லை.
எங்கு போகின்றேன் என்பதை விட
எப்படி திரும்புவேன் என்பதை தெரிந்து வைத்துள்ள பயணி நான்.
வரைந்து வைத்த கோடு என் வாழ்வின் பாதை.
விடை தெரிந்த பயணங்களென்பதால் என் பயணங்கள் முடிவதில்லை!
மாலையே, என் பயணத்தோழமையே நம்மிருவர் பயணங்கள் முடிவதில்லை.
நீயும் வானடைகின்றாய்.
நானும் வீடடைகின்றேன்.
A Gladys Stephen evening travelogue!
Comments
Post a Comment