காலை வணங்கு!

காலை வணங்கு.
கருத்துடன் வணங்கு.
வாழும் வாழ்க்கையின் வருத்தங்கள் நீக்கு.
காலையின் கடமைகள் ஆயிரம் இருக்கு. கனிந்த மனதுடன் கருத்துடன் இயங்கு. வாழும் வாழலின் வழிகளை பெருக்கு. நன்றாம் வழிதனை பிறர்க்கு பகிரு.
வாழ்வதை தருவதே தியாகம்,
வாழ்ந்து தருவதே அனுபவம்.
வாழ்வில் போராடுவதே முயற்சி.
வாழ்ந்து ஜெயிப்பதே வரலாறு.
வாழு.
நீ ஆறென்பாய், காட்டாறென்பாய்.
காற்றின் திசைச்சிறகென்பாய்
ஆயினும் பயணம் என்னமோ உன்னுடையதே.
உன் பயணம் என் பாடம்.
என் பாடம் இன்னொருவர் பாடம்.
பகிரலே வாழ்க்கை.
பகிர்ந்தாலே வாழ்க்கை.
அன்பைப்பகிர்வோம்.
அன்பில் வளர்வோம்.
அன்பாலே வளர்வோம்.
அன்பாயே வளர்வோம்.
என்ன கொண்டு வந்தோம் எடுத்துச்செல்ல.
என்ன கொண்டு வந்தோம்
விட்டுச் செல்ல?
வந்ததும் போவதும் பெருங்கனவே. சிறுகதையே.
விட்டுச் செல்லும் நீதி நலமாயிருக்கட்டும்.
ஏனெனில்...
நம்முடைய வாழ்வை எங்கோ ஓர் சிறுமி ...
ஒரு ஊரில் கிளாடிஸ்...கிளாடி ன்னு ஒரு பொண்ணு இருந்தான்னு ஆரம்பிக்கும் !
ஒருமுறை பிறந்தோம் முழுமையும் வாழ்வோம்.
Gladys Stephen short story morning!
Good morning friends!
காலை வணக்கம்!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.