முரண் காலை..


❣️❣️❣️❣️❣️❣️

எதிர்வினை உணர்வுகளைப்பற்றிய சிரிப்புகளோடு சில சகிக்க முடியாத சோகங்களை யட்சிகளின் வைகறைப்பாட்டோடு விடியலைச்சந்திக்கின்றேன்.

எல்லோருக்கும் காலை நலமாய் விடிகின்றதாய் நம்பச்சொல்லி நானும் அசுவமேத போஸ்டிங்குகளால் மண்குதிரைத்தேரோட்டி, பொய்க்கால் குதிரையேற்றம் செய்கின்றேன்.

யட்சிகளின் இரத்தம் தோய்ந்த முகங்களில் நான் சேகரித்து வைத்திருக்கும் இரத்த மைகளைக்கொண்டு எழுதும் நாடோடிப்பாடல்கள் வைகறையைத்தான் பூபாளமிசைக்கும்.

எல்லோருக்கும் நலமாய் விடிந்த கிளிக்கூட்டு விடியல்களின் தங்கக்கதவுகளை தாண்டிவர
எவருக்கும் விருப்பமில்லை.

தோள் தருவதாய்ச்சொல்லி தொடைநடுங்கும் நாவுகளின் தைரியமெல்லாம் ஒரு செல்ஃபி போஸ்தானேயன்றி வேறொன்றுமில்லை பராபரமே 🤣!

யட்சிகளின் மருதாணியற்ற
பாதங்களின் வலிகளை என் வரிகள் உங்கள் சிந்தனைக்குத்தந்தால் அதுவே ஒரு விடியலின் கீற்று.

ஏனெனில், நாடோடித்தென்றல்கள் சுமக்கும் பூக்கூடைகளில் எப்பொழுதும் ஒரு கொத்து கண்ணீர் பூக்கள் பல்லிளித்துக்கொண்டிருப்பதை என்னால் என்றும் சகிக்க முடியவில்லை.

அழத்தேவையில்லாத அனுதாபங்களை அகற்றிவிட்டு ஆங்கோர் மாதின்
ஈரம் காய்ந்த விழிகளில்
தேடிப்பாருங்கள் அர்த்தமற்றவையாகும் அழகியல் வாழ்த்துகள்.

Dedicated to that lonely survivor of an unappreciated morning!

A Gladys Stephen Oxymoronic verse!
Let this morning not be a bad one!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.