வீசும் வாசம்.
💛💛💛💛💛
மாலைக்குள் வந்து
மணம் வீசுவாய் மாலையே.
பகல் முழுதும் நெய்த
பணிகளை முடித்துவிட்டு,
பகலாரம் சூடிவிட்டு,
வண்ணங்கள் சூடி,
வாசம் வீசு மாலையே.
எனக்குத் தெரியும்
அகன்றாழ, உயரகல
வினைகள் முடித்து.
ரணங்கள் தாண்டி
மரணங்கள் பார்த்த மாதவம் நீயே.
மௌனங்கள் சூடி
ஓசைகளை விழுங்கிய
சூளைக்கல் நீ!
பழுக்கச்சிவந்து பனியாகிப்போன பயணப்பூமாலை உன் அன்றாடம்.
வாடா மல்லி பூச்சரம் நீ !
வீசும் வாசம் உன்
அசௌகரியங்ககளின் அழகேயன்றி சௌகர்யங்களின் செருக்கன்று.
மாலையே வா, வீசு வாசம்.
A Gladys Stephen fragrant evening!
Comments
Post a Comment