ஒற்றைக் கால் தவம்
.
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
காலையில் நான் பங்கு பெறும்
கால ஓட்டபந்தயத்தில் கால் கடுக்க நிற்பதென்பது அனுதின யோகா.
இடுப்பு பிடித்து நிற்பதென்பது
வயதான யோகா.
கண் பூத்து நின்று கடுப்பாவதென்பது படிச்ச புள்ளய்ங்க யோகா.
ஆக மொத்தம் மகளிர் யோகாக்களில் மனசெல்லாம் தெம்பாகுது.
மத்தியமர் வாழ்வில் ஓய்வற்ற ஓட்டமே ஓயாதது.
மாலையில் தொங்கும் யோகா. இடியோகா.
நிற்க இடமில்லா யோகா.
இருக்க சீட்டற்ற யோகா.
மாலையே ரொம்ப கால் வலிக்கா
யோகா இருந்தால் தாயேன்!
A Gladys Stephen Yoga Evening 🤣!
Comments
Post a Comment