புயலடித்தோய்ந்த காலை...

நேற்றின் புயல்களெல்லாம் இன்றைக்கும் தொடராது.
புயல் அடிக்கும், கடக்கும், வீசும், நிலைகொண்டே இருக்க
அது என்ன அன்பா?
அன்பு கலங்கரை விளக்காம் ஷேக்ஸ்பியர் சொன்னது.
கலங்காதே.
மனமே!
பாதை கரடு முரடாயிருக்கக்கூடும் பயணம் இனிதே முடியும்.
நினைத்தால்...
நாம் நினைத்தால்!
வாழ்க்கை பெரும்போர்க்களம்தான், புயல்களும், சூறாவளியும் புரட்டிப்போடும் போராட்டம் தான்.
விட்டு விடலே தோல்வி!
எழுமின்!
வலியது வாழுமென்பது டார்வினிஸம்.
அறிவுண்டே, ஞானமுண்டே, கலையுண்டே வேறென்ன கவலையுனக்கு?
கடவுளுண்டென்றால்,
கடவுளும் உண்டே கடந்து போவதுமுண்டே.
எழுமின்!
ஞாயிறை வாழு!
பின்வரும் கிழமைகள்
சுகமாய் தொடரும்.
நம்பிக்கையே வாழ்க்கை!
Gladys Stephen Sunday Song!
Happy Sunday!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.