பவானி எக்ஸ்பிரஸ்....

விரைதலும் தொலைவும் 
இணைந்தே இருப்பவை. ஈரோட்டிலிருந்து பவானிக்கு விரைதலென்பது தூரம்
கடக்கும் பயணம்.


ஏதோ ஒன்றைத்தொலைத்தது போல எப்போழ்தும் ஓடுகின்றோம்.
குறிப்பாக மாலைகளில்.
எதையும் தொலைக்கவில்லை.
எது நிரந்தரமோ அங்கேயே மனம் சாயும்.
எங்கு மனம் இளைப்பாறுமோ
அங்கேயே மனம் ஏங்கும்.
அவிழ்த்து விடப்படும் நேசவிலங்குகளெல்லாம் மோப்பத்திலேயே வீடடையும்.
மானுட விலங்கு நான்
நேசத்தினால் வீடடைவேன்.
அங்கேயே ஜீவனின் வாசம் வீசிக்கொண்டிருக்கும்.
ஒவ்வொரு சுவரிலும் என் பார்வையின் படிமங்கள் உறைந்திருக்கும்.
ஒவ்வொரு அறையின் பிரத்யேக முணுமுணுப்புகளும் மரணத்திலும் மறக்காது மாலையே.
தொலைவுப்பயணம் மீள்கையில் முன்னறையின் புன்முறுவலும் சமையலறையின் முறைப்பும் 藍 என்னை குபீரிடச்செய்யும்.
ஒரு வேளை நான் கூடடை பறவைதான். மௌன கௌதமிதான்.
ஆனாலும், ஒரு வாயாடிச்சிறுமியின் அத்தனை வளவளாக்களும்
இன்றும் பொங்கி வழியும் நயாகரா, சிரிப்புச்சதங்கை சிதறிடும் நைல் நான்.
எப்பொழுதும் என் வாழ்வின் சுவாசம் இந்த அழகிய கூட்டில் உறைந்திருக்கும். ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் பவானி எக்ஸ்பிரஸ் வந்தடைந்த ஸ்டேஷன் என என் ஆத்மா சொல்லும்.
கடைசி பயணி இறங்கிய பின்னும்
அதன் தடதடாக்கள் எதிரொலித்து கொண்டே இருக்கும்.
தூரத்தில் மணியோசை கேட்கின்றது.
பவானி...
A Gladys Stephen evening echo!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.