ஒவ்வொரு ஞாயிறும் ஒரு தவம்!
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
இது வாரத்தின் தவ சுப்ரபாதம்.
மனித மனதுக்கான திருப்பள்ளியெழுச்சி.
ஓய்வென்பதே குணமாகுதலின்
முதல் மருந்து.
ஓய்வெடுத்தலே வாழலின் அறிகுறி.
உழைப்பவருக்கு ஓய்வு மருந்து. உழைக்காதவர்க்கெல்லாம்
ஓய்வே மரணம்.
நடுநிலையோடு வாழலே நற்பயணம்.
அதில் உழைப்பும் ஓய்வும் சரிசமம்.
நிறைய தீர்மானங்கள் கொஞ்சம் நிறைவேற்றல்கள் என்றாகவே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது.
மனசுக்குள் நிறைய தீர்மானங்கள் கொஞ்சமே நிறைவேற்றல்கள்.
உள்ளார் சோர்வுகள் அதிகம் உண்டு.
வெளிக்கடமைகள் நிறைய உண்டு.
விடுதலைக்கான சிறைகளாய் நூல்கண்டு சிக்கல்கள்.
நாமே சிக்கிக்கொண்ட நிகழ்தகவு நிதர்சனங்கள்.
ஞாயிறுகளில் நாம் வளப்படுவோம். நெஞ்சுக்கருகான நிமிடங்களை வனைவதே விடுமுறை வேலை.
கால வெள்ளத்தின் அவசரப்பாய்ச்சலில் நாமெல்லாம் கடமைக்கு கடன் தீர்க்கும் கருவிகளாகிப்போனோம்.
நம் வாழ்வென்பது நமக்கான அனுமதி. எல்லாம் தந்துவிட்டு ஒவ்வொன்றாய் அபகரிப்பதே வாழலின் குரூரம்.
எதுவுமே இல்லாமல் வந்து எல்லாம் பெற்றுக்கொண்டவரும் கொண்டு போவதென்ன?
அடிப்படை ஆனந்தங்களை அனுமதிக்காத மதமும்-மானுடமும் வாழலின் கொடூரங்கள்.
சிலவற்றை நிறைய சிலாகித்து புராணப்படுத்திவிடுவதில் எல்லோரும் கிரேக்கத்தின் வாரிசுகள்.
கதை கதையாய் காரணமாய் மானுட உரையாடல்கள்.
தொடர் நீட்சிகளால் போதையாகிப்போன பொது மனம் தாண்டி நிற்பவரெல்லாம் பைத்தியக்காரனென்ற இலகு பதத்தாலே சாகடிக்கப்படுகின்றான்.
வாழல் தனி நபர் பட்டா அல்ல.
பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் வாழ வேண்டிய சமத்துவ சம தர்ம ஜனநாயகப் பாதை.
வடிவமைத்த வரம்புகளின் நோக்கமெல்லாம் மனித குல மேம்பாட்டின் மோகீசன் கட்டளைகள்.
எப்பொழுதும் ஒரு உயரின சிந்தனைக்கு அடிமையாவதே விலங்கின அடிமைகளின் கருக்குற்றம்.
ஞாயிறுகளின் தவங்களில் உங்கள் ஆயுள் ரேகைகளை பழுதுபாருங்கள்.
அன்பும்-அறமுமே சிம்பிள் லாஜிக்!
ஞாயிறு போற்றி!
A Gladys Stephen Sunday!
Comments
Post a Comment