பேரமைதி.
✋✋✋✋
மகா இரைச்சல்கள்
மத்தியில் முகிழ்வதே
பேரமைதி.
ஓசைகளற்ற பிராந்தியத்தில் துயில்வதன்று
நிசப்தம்.
பெருங்காற்றின் மத்தியில்
பூத்திருக்கும் சிறுமொட்டே
சமாதானம்.
மஹாபுயலில் நெஞ்சுமுட்டி தொட்டபெட்டா தொடுவதே
கழுகுப்பறப்பு.
அதன் சிறகுளில் ஒட்டியிருக்கும் நீர்திவலைகளிலிருப்பதே
பேரமைதி.
மானுட மனங்களால்
அசைவுறாமற் இருப்பதே
பெருந்தவம்.
உள்ளார் அமைதியை உலகோர் கெடுக்கவியலாது.
பேரமைதி கண்டவர்க்கெலாம் பெரும்புயலெல்லாம் சும்மா!
A Gladys Stephen peace!
Comments
Post a Comment