காலை.
❣️❣️❣️
ஒவ்வொரு காலையும்
ஒரு பெருந்தவம்.
இரவு வனம் விடுத்து
பகற்சோலையில் பயணம் போகும் வாழ்க்கை தவம்.
இதை போராட்டமென நினையேன் பொறுமையுடன் ஓடுவேன். பொறுமையிழக்கும் தருணத்திலும் பொறுமை காப்பேன்.
பழைய மனிதர்கள்,
புதிய மனிதர்கள் யாராயினும்
நானே நானாய்
நடந்து கொள்வேன்.
இலக்கொன்று இல்லா
இலக்காய் இலங்க மாட்டேன்.
எங்கேயும் எப்போதும் என் காலை
என் தவம்.
திரும்பி வரும் முன்பதிவுகளை
எண்ணி எனக்குள் நானே
எழுதிடும் பயணத்திட்டங்களிலேயே வாழ்கின்றேன்.
வாழ்வின் வரலாற்றில்
நானோர் என்னத்தியாயம்.
எழுதுபவளும் நானே
வாசிப்பவளும் நானே.
என்ன தவம் செய்தேன்?
என்ன வரம் தருவாய் காலையே?
A Gladys Stephen Good Morning History!
Comments
Post a Comment