உனக்காயொரு காலை.
காலையில் கண் விழி
கண்களில் விண்ணொளி கண்டிடு,
நின்றிடு நீ.
கண்களில் விண்ணொளி கண்டிடு,
நின்றிடு நீ.
வரம் தேடிடு நாடிடு
தெய்வதம் கொண்டிடு,
கொண்டிரு நீ.
தெய்வதம் கொண்டிடு,
கொண்டிரு நீ.
வந்தனம் சந்தனம் குங்குமம்
மங்கலம் சாற்றிடும்
சந்ததம் நீ.
மங்கலம் சாற்றிடும்
சந்ததம் நீ.
பல முன்னையர் தந்தையர்
ஈந்திடும் தத்துவம் சத்துவம்
கொண்டிடு நீ.
ஈந்திடும் தத்துவம் சத்துவம்
கொண்டிடு நீ.
கயற் கண்ணியர், கன்னியர்
கண்நிறை மங்கையர் காதலும்
கொண்டிரு நீ.
கண்நிறை மங்கையர் காதலும்
கொண்டிரு நீ.
மலை மன்னரே மண்ணிடம்
கொண்டிடும் தொண்டினை, பற்றினை பாட்டிடு நீ.
கொண்டிடும் தொண்டினை, பற்றினை பாட்டிடு நீ.
வலை பின்னிய மின்னலை
மீட்டிடும் மாரியை, மழை காரியை
தந்திடு நீ.
மீட்டிடும் மாரியை, மழை காரியை
தந்திடு நீ.
சுக சேதிகள் சொல்லிடும்
தேதியை சோதியை, நாளினை நேரினில் தொட்டிடு நீ.
தேதியை சோதியை, நாளினை நேரினில் தொட்டிடு நீ.
பல வேதிகள் கூடிய
வேதிம மீதியை கூடிட வேலையைச்
செய்திடு நீ.
வேதிம மீதியை கூடிட வேலையைச்
செய்திடு நீ.
சுப காலைகள் நாடிடும்
மானுடம் மீதினில், பல வாழ்த்துகள்
தந்திடு நீ.
மானுடம் மீதினில், பல வாழ்த்துகள்
தந்திடு நீ.
A Gladys Stephen காலையின் கவிமாலை !
Comments
Post a Comment