எங்கேயும் போய்விடாதே...
💛💛💛💛💛💛💛💛💛💛
மாலையே...
காலையில்தான் உனக்கு
பணிகள் அதிகம்.
எனக்கும் தான்.
இந்த சமையலில் ஆழ்ந்து போனால் என்னையே மறந்து போகின்றேன்.
நாம் சமைத்து நாமே தின்னும் பொறுமையே உலகின் மிகச்சிறந்த பொறுமை.
தானே தனக்கு ருசி பார்த்து...
உப்பு, புளி, எரிப்பு பார்த்து சமைத்து, பரிமாறி, கழுவி அடுக்கி....அடடடடா... ஆனாலும்...இது பிடித்திருக்கின்றது.
இந்த தனிமையின் ஒழுங்குகளும், தொடரும் ஓட்டங்களும் பிடித்திருக்கின்றது.
ஒப்பனைகளற்ற இந்த வாழல்
வேகம் பிடித்திருக்கின்றது.
தேம்பியழும் நாய்குட்டியாய் பஸ் கிடைக்காமல் சகபயணிகளோடு கவலைகொள்ள பிடித்திருக்கின்றது. கையுயரம் தூக்கி கம்பியில்
கால்படாமல் தொங்க...
அழுது கொண்டே...
வலித்துகொண்டே பிடித்திருக்கின்றது.
வீடடையுமுன் எதுவுமே நடக்காதது போல மோகனமாய் இருளில் புதையும் மாலையே...
எங்கேயும் போய்விடாதே.
நாளையும் வருவேன்.
தனிமைக்குத்துணையிரு!
Comments
Post a Comment