மனசெல்லாம்
மனசெல்லாம்...
🌺🌺🌺🌺🌺🌺
மனசெல்லாம் செண்கப்பூ.
மாலையிலே மல்லிகைப்பூ.
மணம் மாறாத பிச்சிப்பூ.
மணம் வீசும் ரோஸாப்பூ.
தேவாரம் பாடிவரும் தேன்குழல் பூ.
தென்மதுரை பாண்டியர்தம் முத்துப்பூ.
சாலையோரம் சாம்பல் பூ.
தும்பிகளின் உன்னிப்பூ.
ஊரோரம் ஊதாப்பூ.
கோவிலிலே அரளிப்பூ.
காட்டோரம் ஆவாரம் பூ.
காதலிலே குறிஞ்சிப்பூ.
மந்தாரப்பூ, மகிழம்பூ.
செக்கச்சிவந்த செம்பருத்தி பூ.
கண்ணுக்குள்ளே கனகாம்பரப்பூ. தாழம்பூ, தாமரைப்பூ
மணக்குமே மரிக்கொழுந்தே நீயும்பூவே.
அன்பாலே பூ,
அன்பே அழகான பூ.
அன்பாலே அன்புப்பூ.
அன்புடன் அன்பாய் பூ!
பூ மாலையே ...
A Gladys Stephen evening flowers!
188/200
Comments
Post a Comment