ஓட்டம்


நிற்காத ஓட்டம்.
கைப்பற்ற ஓட்டம்.
காலை துவக்கிய ஓட்டம்.
எனக்காய் நான் ஓடும் ஓட்டம்.
நிலையான ஓட்டம்.
நீங்காத ஓட்டம்.
யாருக்கும் காத்திராத ஓட்டம்.
வழித்துணைகள் தேடாத ஓட்டம்.
ஒரு நோக்கத்திற்கான ஓட்டம்.
யாரையும் நோக்காத ஓட்டம்.
யாரையும் நோகடிக்காத ஓட்டம்.
எனக்கான ஓட்டம்.
நின்று பார்க்க நேரமற்ற ஓட்டம்.
கண்காட்சிகள் அழகுதான்.
ராபர்ட் ஃப்ராஸ்ட் (Robert Frost) கவிதை போல.
ஆனாலும்...
நீண்ட தொடுவானம் போல தொடா வானங்களைத்தொட மண்ணில் ஓடுகின்றேன்.
அனுதாபங்கள் தேவைப்படாத விலங்கு நான் .
என்னை நீங்கள்
ஒரு துயர விலங்காக எண்ணியிருக்க அனுமதிக்க மாட்டேன்.
ஆதரவு தேவைப்படாத பேரோலம், பேரிரைச்சல் என் வாழ்க்கைப்பாதை.
அதை இசையாக்கவும், இன்னிசையாக்கவும் என் தந்திகள் மீது நான் ஓடியோடி நடத்தும் ராக ஆலாபனைகளே என் பொழுதாம் மேடை.
நானே ஒப்பனை, கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு.
என் வார்த்தைகளின் ஜனனத்தில், என் வாழ்வு ஜன்னல்கள்.
காற்று வந்து போகும் சாளரங்களிலும், என் பாட்டின் சுதி மாறாது.
சுருதி பேதம் காணாத மனுஷ்ய ஓட்டம் என் வீடடையும் ஆட்டம்!
இந்த ஓட்டம் முடிகையில் நானும்...
Gladys Stephen run!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.