காலையாம் போதி மரம்.

ஒவ்வொரு காலையும் போதிக்கும் போதி மரம்.

நம்பினாலே ஞானம்.
நானும் நம்புகின்றேன்.

வானம் மிகச்சிறந்த தபோபனம்.
நீல விரிப்பாம் நினைவோடைகளில் நீந்துகின்ற விண்மீன்கள் தொடுத்து, சந்திரமுகத்தாளை டாலர் அணிவித்து, இயற்கையாம் எழில் பூண்டு, அழகோவியத்தவம் செய்யும்,
அற்புத நாள் காலை.

அதெப்படி பகலில் நிலவும், விண்மீன்களும்?
நினைவோடைகளுக்கு ஏதம்மா பகலிரவு?

எப்பொழுதும், முப்பொழுதும் நீங்கா நினைவுகள் கோர்த்து செய்யும் தவமாலைக்காலைகளில் வரம் வாங்குவேன் வாழ!

வாழ்வென்பது
"என்ன வாழ்க்கை வாழ்கின்றேன்!" என்ற சலிப்பன்று.

"இன்னும் வாழ்வேன்", என்ற சல்லடைத்தீர்மானம்.

உறுதி கொள்வேன் இறுதிவரை!

வாழலாம் போரில், நானே மங்கம்மா, நானே ஜான்சி கி ராணி.

தோல்விகள் ஏதுமில்லை.

"தோற்றுவிடுவேனோ  நான்?", என எண்ணாத வரை.

எழுக!
இன்று நமது நாள்.

இனிய காலை அதை உணர்த்தும்!

A Gladys Stephen war challenge  in the morning!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.