சந்தியா ராகம்..
சந்தியா ராகத்தின் யௌவனங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் அசாதாரண வெளிச்சங்களைப்பற்றிய புரிதல்
எனக்கு அருகாமையிலேயே.
எனக்கு அருகாமையிலேயே.
கண் முன்னேயே வயதின் வர்ணம். வயது செல்கின்றதா, மூப்பெனும் முதுமையா அல்லது அஸ்த்தமனத்தின் பூபாளமா?!
நேர்த்தியான நாட்களின் நாடகங்களுக்கும் ஒரு 'முற்றும்', 'சுபம்' அல்லது ஒரு முடிவுண்டு.
அஸ்த்தமனத்தின் அடிவாரத்தில் இளைப்பாற முடியுமா தெரியாது.
நினைப்பாற முடியும்.
ஓய்ந்த கனவுகளின் வெறுமைகள் ஊதக்காற்றாய் கடந்து செல்லும்.
ஓய்ந்த கனவுகளின் வெறுமைகள் ஊதக்காற்றாய் கடந்து செல்லும்.
திரும்பி வாராத தென்றல் காட்சிகளின் அசை போடல்களால் உயிர் அசைகின்றது.
காற்றில் ஆடும் கடைசி வெளிச்சம் போல.
இருளுக்கு திடுக்கிடாத ஜீவனில்லை.
இருளுக்கு திடுக்கிடாத ஜீவனில்லை.
இருள் வரும் நேரம் !
அகவெளிச்சத்தின் வேலை அருகும்.
அகவெளிச்சத்தின் வேலை அருகும்.
உள்ளொளிர்தல் என்றான கண்டுகொள்ளல்கள் இல்லாத மானுடமில்லை.
சந்தியா ராகத்தின் மௌனங்களில் ஓசைகளிருக்கும் .
கச்சேரி முடிகையில் தொடங்கும் கதறல்களில் கூட இன்னொரு பூபாளத்திற்கான தேடலும் வாய்ப்புமிருக்கும்.
A Gladys Stephen Elegy on the daparted souls met!
Comments
Post a Comment