அந்தி வரும் நேரம்

இந்த ஜீவனில் சோர்வில்லை.
வயதின் வழக்கங்களில் அயர்வென்பது அனுமதிக்கப்படக்கூடியதே.
முறுக்கேற்றப்படும் எதுவும் உருக்குலைந்து போகும்.
தளர்வுகள் வேண்டும்.
நெகிழ்ச்சிகள் வேண்டும்.
இறுக்கம் தவிர்ப்பதே
இதயம் காக்கும்.
காலையுழைப்பு, மாலையோய்வு என வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா, மனிதப்பாப்பா !
அந்தி வரும் நேரம் , ஆனந்தம் வரும் நேரம்.
சின்ன பிள்ளைங்களாட்டம்,
ஸ்கூல் விட்ட பிள்ளைகளாட்டம்,
கொண்டாட்டம் குதூகலம் பேரானந்தம்.
ஒரு கோப்பை காஃபியும், பிடித்தவர் முன்னிருந்து கதைக்கும்  கனவுகளும், சிறகு முளைத்தவை.
அதற்கு அந்தி வேண்டும், அந்தி வரும் நேரமும் வேண்டும்.
அதனோடு வரும் ஆனந்தங்களும் வேண்டும்.
மெல்ல மூடும் விழிகளின் இமையாய் என்னை மூடு.
கனவுகள் சூடி கவிதைகள் அனுப்பு !
A Gladys Stephen வைகறைக் காற்று !

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.