காலையெனும் ஆறுதல்

ஒவ்வொரு காலையும் அருமருந்து.
காயங்கள் கட்டும் திருமருந்து.
வேதனைகள் அகற்றும் நிவாரண மருந்து.

நடந்தவைகள் அகலும்,
மெல்லவாவது அகலும்.
சூரியன் எழும்புகையில் சுத்தமாய் அகலும்.

இறந்த காலமென்பது இறந்ததாயே இருக்கட்டும்.
நிகழ்காலை பிறந்த குழந்தையாகட்டும்.

அன்பாலே வம்புகள் வெல்வோம்.
அன்பாலே அன்பைப்பகிர்வோம்.

சொல்லாலே சொன்ன அன்பை செயலாலே செய்வோம்.

தேவைப்படும் அன்பை இலவசமாய் தருவோம்.

விலை பேச முடியாத ஒரே பொருள் அன்பு மட்டுமே.
அதற்கு விலைப்பட்டியல் வேண்டாமே.

நிபந்தனையற்ற அன்பே நிலைக்கும்!

Love unconditionally!

A Gladys Stephen morning thought!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.