ஞாயிறாம் சூரியம்.

ஞாயிறாம் சூரியரே.
லீவுக்கதிபதியே குட் மார்னிங்!
அப்பாடாவென அக்கப்போர் முடித்து அக்கடாவென குவிந்த துணிகள் துவைக்க விட்டீரய்யா.
பரபரக்காத நாளுக்கு தேங்க்ஸ்.
ஆனாலும், இந்த சமையலுக்கு உண்டா லீவு?
வாபஸ்.
பசிச்சா என்ன செய்வேன்?
அதுனால வாபஸ்.
யாராவது வருவாங்களா?
எங்கயாவது போணுமா?
எதிர்பார்ப்புகளும் சேர்ந்து கொள்ளும்.
ஒரு நல்ல இங்லீஷ் படம், ஒரு நல்ல மலையாள படம் எப்பவாவது வரும் ஒரு...
சரி விடுங்க.
அத்தையோடு சில தருணங்கள். சிறகான கணங்கள்.
சிரிப்பு, பேச்சு, வாராத தொலைபேச்சுக்கள் & மருதாணி அரிதாரம்😂.
மனமது செம்மையானால் மந்திரமது செபிக்க வேண்டாம் என எங்கேயோ கேட்ட குரல் !
எனக்குள்ளும் ஒரு உச்சாடனம் ஒலித்துக் கொண்டிருக்கும்.அதில் கதறல், கண்ணீர், கோபம், வேதனை, வெப்றாளம், வெறி எல்லாமிருக்கும்.
ஆனாலும் ஒரு மோனலிசா பாவங்களாய் எனக்குள் நானே அனுப்பும் புன்னகைகளால் வாழ்ந்து கொள்கின்றேன்.
ஆற்றாமைகள் இல்லை ஆறுதல்கள் தேவையில்லை.
ஆனாலும் ஆற்றிய அன்புகளை மறுப்பதில்லை மறுப்பதற்கில்லை.
ஞாயிறாம் சூரியத்தில் நானுமோர் சகமனுசி.
நாளையாம் திங்களில் நானுமே ஓர் நாள்வாசி.
திரும்பவும் ஒரு வாரம்!
திரும்பவும் வேலை !
பயணம் !
முகத்திலறை காற்று!
ஞாயிறாம் சூரியம் ஆறுதலே !
Happy Sunday!
நோ சண்டை. சமாதானம் !
A Gladys Stephen Sundaygraphy

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.