ஆவாரம் பூவு🍃

பூக்களில் நீ ஆரவாரம்.
அகழ்ந்தேன் இம்மாலையில் உன் அவதாரம்.
பணி முடித்துத்திரும்புகையில் பிரமிப்பு.
ஒரு மகா தேசத்தின் இருப்பை உறுதி செய்யும் சாமான்யர்களைப்போன்றே ஆவாரம் பூவும்!
சாமான்யர்களின் ஓட்டமும் நடையுமான வாழ்வில் எத்தனை சந்திப்புகள் குதூகலங்கள்.
தாமரை தேசிய மலர்தான்.
ரோஜா, ராஜாக்களின், ராணிகளின் மஞ்சத்தில்தான்.
மல்லிகைகள் மயக்கத்தான்.
பிச்சிகளும், முல்லைகளும் மகிழ்விக்கத்தான்.
ஆவாரம்பூவை ஆழ்ந்து பாருங்கள்,
சாமான்யச்சேதிகள் நிறைய உண்டு!
இந்த மாலை போல்.
மனதிதமான சேதி போல்.
சாமான்ய வாழ்வின் சந்தோஷங்களை காண முடிந்ததை விட வேறென்ன சந்தோஷம்?
நாம் போகும் பாதைகளில் காத்திருக்குது.
ஆவாரம் பூவு!
Gladys Stephen awesome ஆவாரப்பாடல்!
Happy evening!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.