கூடா நட்பு
ஆன் லைன் நட்பும், ஆத்மார்த்த நட்பும் மோதிக்கொல்லும் காலமிது.
உயிரின் புரிதல் வேறு ஒரு மின்னணு இதயஸ்மைலி வேறு.
வார்த்தைகள் வலுவானவை தோழமையே.
சொக்குப்பொடி பேச்சில் வைத்த சயனைடு வசியங்களின் காயம் நெஞ்சகலவில்லை.
ஆன்லைன் உளவுத்தொழிற்சாலை நம் மூளை.
யாருக்கு யார் லைக் போட்டால் நமக்கேன் ஹேட்ரட் 😈?
" " ஓ! லைக் போட்டுட்டான்.
இன் பாக்ஸ்ல பேசிருப்பாங்க.
வாட்ஸப்புல கடலதான்🤔😓😣!?
அட கடங்காரர்களே ,புள்ளய்ங்க டிஃபன் பாக்ஸ நிரப்புங்க.
ஆன்லைன்ல இருக்க அம்புட்டு பேரயும் மாறி, மாறி பாக்குறீங்களே, வூட்டுக்காரங்கள பாருங்க
ஆன் லைன்ல இருக்காங்களான்னு. " "
இப்படிப்பட்ட பேச்சொன்றை பின்னிருக்கையில் கேட்டேன்.
முகம் பார்க்கவில்லை.
நீங்களும் இதைப்போல கேட்டிருப்பீர்கள்.
உங்களுக்கும் இப்படிப்பட்ட நட்புகள் இருக்கலாம்.
பிறந்த நாளை நினைவு கூறுபவரெல்லாம் நட்புமல்ல, நினைவுகூறாதவரிடம் அன்பு இல்லையென்றுமில்லை.
நல்ல நட்பு தொடர அவர்களை லிஸ்டில் வைக்காதிருங்கள்.
உங்கள் பச்சை லைட்டில்
அவர்கள் மண்டைக்குள் நீலம் ஓடுமென்பதே நான் சொல்லும் சிகப்பெச்சரிக்கை.
A Gladys Stephen surveillance poem 🤣
Comments
Post a Comment